சுடச்சுட

  

  போதைப் பொருள் ஒழிப்பு, மதுக்கடைகள் மூடல்: அமரீந்தர் சிங் அரசின் முக்கிய முடிவுகள்

  By DIN  |   Published on : 19th March 2017 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  meeting1

  பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் சண்டீகரில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவையின் முதல் கூட்டம்.

  பஞ்சாபில் அமரீந்தர் சிங் அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு, கடுமையான அரசு விதிமுறைகளை ரத்து செய்வது, 484 மதுபானக் கடைகளை மூடுவது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

  பஞ்சாபில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து, அமரீந்தர் சிங் முதல்வராகப் பொறுப்பேற்றார்.
  முன்னதாக, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 300-க்கும் அதிகமான வாக்குறுதிகளை தெரிவித்திருந்தது.
  இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் அமைச்சரவையின் முதல் கூட்டம் சண்டீகரில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக, முதல்வர் அலுவலக செய்தித் தொடர்பாளர் பின்னர் கூறியதாவது:
  தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
  இதில், முதல்கட்டமாக 100-க்கும் மேற்பட்ட முடிவுகளை அமல்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவற்றில் போதைப் பொருள் ஒழிப்பு, கடுமையான அரசு விதிமுறைகளை ரத்து செய்வது, 484 மதுபானக் கடைகளை மூடுவது, அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் இலவச வை-ஃபை சேவையை வழங்குவது உள்ளிட்டவை முக்கியமானவையாகும்.
  மேலும், விவசாயம், தொழில் துறைகளைச் சீரமைப்பது தொடர்பாக உயர்நிலைக் குழுக்களை அமைப்பது, விவசாயக் கடன்களை படிப்படியாக குறைப்பது, கல்வி, சுகாதாரத் துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது, தலித்துகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சலுகைகளைத் தொடர்வது, உள்ளிட்டவை அந்த முடிவுகளில் அடங்கும். அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் 9 அமைச்சர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai