சுடச்சுட

    

    மகாராஷ்டிரம்: கடத்தல் மணலை பறிமுதல் செய்ய முயன்ற அதிகாரிகள் மீது தாக்குதல்

    By DIN  |   Published on : 19th March 2017 11:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிரத்தில் கடத்தல் மணலை பறிமுதல் செய்ய முயன்ற வருவாய்த் துறை அதிகாரிகள் தாக்குதலுக்கு ஆளாகினர். அவர்களைத் தாக்கிய இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சோலாபூரிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பிலான மணலைக் கடத்தி வந்து, உஸ்மானாபாதில் சிலர் பதுக்கி வைக்க முயலுவதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
    இதன்பேரில் உஸ்மானாபாத் வட்டாட்சியர் ஆயுஷ் பிரசாத், வருவாய்த் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்றனார்.
    அப்போது, கடத்தலில் தொடர்புடைய இருவர் தங்களுடைய வாகனத்தின் மூலம் வருவாய்த் துறை அதிகாரிகளின் வாகனத்தின் மீது மோதியுள்ளனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
    தொடர்ந்து, அங்கிருந்த மணல் பறிமுதல் செய்யப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அக்பர் ஷேக் மற்றும் இலியாஸ் ஷேக் என்று தெரியவந்துள்ளது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai