சுடச்சுட

    

    அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்

    By DIN  |   Published on : 20th March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு தொடர்புடைய வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்களிடமும், மாநில முதல்வர்களிடமும் சட்டத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
    இதுகுறித்து சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தனது அமைச்சரவை சகாக்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
    தற்போது இந்திய நீதிமன்றங்களில் 3.14 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் சுமார் 46 சதவீத வழக்குகளில் மத்திய, மாநில அரசுகள் வாதியாகவோ, எதிர்வாதியாகவோ உள்ளன. இதனால், பிற வழக்குகள் மீது கவனம் செலுத்த முடியாத அளவுக்கு நீதிமன்றங்களுக்கு பணிச் சுமை அதிகமாக உள்ளது.
    இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தாங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவது, விரைந்து முடிப்பது போன்றவற்றை அந்தந்த அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
    மாநில அரசுகள் மீதும், அரசு அதிகாரிகள் மீதும் வழக்கு தொடரப்படுவது முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்தப்பட வேண்டும். நீதிமன்றங்களில் மாநில அரசுகளுக்கு எதிராக வழக்கு தொடர்வது கடைசி ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    நாட்டின் மிகப் பெரிய வழக்காடுநராக அரசு விளங்கி வருவதாகவும், இதன் காரணமாக நீதிமன்றங்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச் சுமை குறைக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai