சுடச்சுட

  

  ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு இணையாக காங்கிரஸின் நிர்வாகக் கட்டமைப்பு இல்லை: ப.சிதம்பரம்

  By DIN  |   Published on : 20th March 2017 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  chidambaram

  ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் கட்சியின் நிர்வாக கட்டமைப்பு வலுவாக இல்லை என அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
  சிதம்பரம் எழுதிய "அச்சமில்லாது எதிர்ப்புத் தெரிவிப்பது' என்ற தலைப்பிலான புத்தக வெளியீட்டு விழா கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
  ஆர்எஸ்எஸ்-பாஜகவின் நிர்வாகக் கட்டமைப்புக்கு இணையாக காங்கிரஸின் நிர்வாகக் கட்டமைப்பு இல்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது. வாக்குகளை வெகுவாகக் கவரும் அளவுக்கு அவர்களின் கட்டமைப்பு உள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தில் அதிமுக, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஒப்பிடும்போது பாஜகவின் நிர்வாகக் கட்டமைப்பு வலு குறைந்ததாகவே உள்ளது.
  அடுத்த மக்களவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சி வலுவுடன் எதிர்கொள்ள எந்த வகையில் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டுமென்று எனது யோசனையை கட்சித் தலைமைக்குத் தெரிவித்துள்ளேன்.
  உத்தரப் பிரதேச தேர்தல் முடிவு மூலம், உயர் மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸýக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் அப்போது களத்தில் உள்ள சூழ்நிலைகளைப் பொருத்து அமைகிறது. மாநிலத்தில் உள்ள பிரச்னைகள்தான் பெரும்பாலும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. உத்தரப் பிரதேச மக்கள் ரூபாய் நோட்டு வாபஸýக்கு ஆதரவளிக்கிறார்கள் என்று கூறினால், பாஜகவை தோற்கடித்த பஞ்சாப் மக்கள் அதனை எதிர்க்கிறார்கள் என்று அர்த்தமா?
  நமது நாட்டில் ஜனநாயகம் போதுமான அளவு முதிர்ச்சியடையவில்லை. அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க உண்ணாவிரதம் இருக்கவும், தெருவில் இறங்கிப் போராடுவது தவிர பிற வழிகள் அனுமதிக்கப்படுவதில்லை. நாம் வேறு விதத்தில் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் நமக்கு பிரச்னைகள் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. இந்த அச்சம் நீங்க வேண்டும்.
  இப்போது எதிர்க்கட்சிகளுக்கு இடம் குறைந்து வருகிறது. தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், தொண்டு நிறுவனங்கள்
  என அனைத்துத் தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர் என்றார் சிதம்பரம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai