Enable Javscript for better performance
கல்விக் கட்டணம் செலுத்தாததால் மாணவர்கள் சிறைபிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கல்விக் கட்டணம் செலுத்தாததால் மாணவர்கள் சிறைபிடிப்பு

    By DIN  |   Published on : 20th March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஹைதராபாதிலுள்ள தனியார் பள்ளியொன்றில் கல்விக் கட்டணத்தை செலுத்தத் தவறியதற்காக ஒன்றாம் வகுப்பு படிக்கும் 19 மாணவர்களை பள்ளி நிர்வாகம் சிறைபிடித்தது.
    இதுதொடர்பாக, ஹயாத்நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜே.நரேந்தர் கௌட் கூறியதாவது:
    ஹைதராபாதிலுள்ள தனியார் பள்ளியொன்றில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 19 மாணவர்களின் பெற்றோர் குறித்த நாளுக்குள் கல்விக் கட்டணத்தை செலுத்தவில்லை எனத் தெரிகிறது.
    இதனால், அந்த மாணவர்கள் சனிக்கிழமை தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லையாம். மேலும், அந்த மாணவர்களை தனியறை ஒன்றில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பள்ளி நிர்வாகம் சிறை வைத்ததாகத் தெரிகிறது.
    இதுதொடர்பாக, மாணவர் ஒருவரின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து போலீஸார் பள்ளிக்குச் சென்று நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்களை விடுவித்த நிர்வாகம், அவர்
    களை தேர்வெழுத அனுமதியளித்தது என்றார் நரேந்தர் கௌட்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai