சுடச்சுட

  

  உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய அளவில் பாஜக வெற்றிபெற்றதை அடுத்து, குஜராத் மாநில சட்டப் பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல், வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டும். ஆனால், அந்த மாநிலத்தில், வரும் ஜூலை அல்லது செப்டம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  இந்நிலையில், குஜராத் பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதா?
  என்று அந்த மாநில முதல்வர் விஜய் ரூபானியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பாஜக அரசு 5 ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும்; பேரவைத் தேர்தல் வரும் டிசம்பரில் நடைபெறும்' என்றார். ஆனால், வரும் 2019-இல் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குஜராத் மாநிலத்தில் பாஜக வெற்றி பெறுவது மோடிக்கு முக்கியமானதாகும். எனவே, குஜராத் அரசியல் சூழலில் எதுவும் நடக்கலாம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதே கருத்தை காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகளும் தெரிவித்துள்ளன.
  உத்தரப் பிரதேசத்தில் 325 இடங்களைக் கைப்பற்றியுள்ள பாஜக, 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் பேரவையில் 150 இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக, மோடி, அமித் ஷா ஆகியோரின் படங்களைத் தாங்கிய விளம்பரப் பதாகைகளும், பேனர்களும் மாநிலத்தின் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் காங்கிரஸ் கட்சியும் சட்டப் பேரவைத் தேர்தல் முன்கூட்டியே நடைபெறும் என்று எதிர்பார்த்து, தேர்தல் பிரசாரப் பணிகளைத் தொடங்கிவிட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai