சுடச்சுட

    

    கேரளத்தில் கடும் வெயில்: தொழிலாளர்களின் வேலை நேரம் மாற்றம்

    By DIN  |   Published on : 20th March 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரளத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால், அந்த மாநிலத்தில் திறந்த வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களின் வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
    கேரளத்தில் தொழிலாளர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பணிபுரிகின்றனர். தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் காலை 7 மணி முதல் பகல் 12 மணியுடன் பகல் வேலைநேரத்தை முடித்துக் கொள்ள வேண்டும். அதேபோல், மாலை நேரப் பணி 3 மணியில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
    கேரளம் ஏற்கெனவே வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai