சுடச்சுட

    

    சிந்து நதி ஆணைய விவகாரம்: இந்தியா- பாகிஸ்தான் இன்று பேச்சுவார்த்தை

    By DIN  |   Published on : 20th March 2017 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இஸ்லாமாபாத் நகரில் திங்கள்கிழமை (மார்ச் 20) தொடங்கும் சிந்து நதி ஆணையப் பேச்சுவார்த்தையில் இந்தியக் குழுவினரும், பாகிஸ்தான் குழுவினரும் பங்கேற்கின்றனர்.
    இந்தியாவுக்கான சிந்து நதி ஆணையர் பி.கே. சக்சேனா தலைமையில், வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
    சிந்து நதி நீர் ஒப்பந்தத்துக்கு உள்பட்டு இந்தியா மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்த பாகிஸ்தானுக்கு கவலை ஏற்பட்டால், அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியா எப்போதும் தயாராக இருக்கிறது. அந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா பெற்றுள்ள உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
    காஷ்மீரின் உரி பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, நதி நீர் விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகளை இந்தியா நிறுத்தி வைத்ததற்குப் பிறகு தற்போதுதான் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. அதனால், இந்தப் பேச்சுவார்த்தைக்கான மையப் பொருள் குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. எனினும், ஏற்கெனவே பின்னடைவுகளுக்குப் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளால் பலன் ஏற்பட்டதைப் போல, இந்தப் பேச்சுவார்த்தையும் வெற்றி பெறும் என்று நம்பலாம் என்று அரசு வட்டாங்ரகள் தெரிவித்தன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai