சுடச்சுட

    

    சிறப்பாகச் செயல்படாத கல்வி நிறுவனங்கள் விரைவில் மூடல்: மத்திய அரசு

    By DIN  |   Published on : 20th March 2017 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    college_stud

    பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வழிகாட்டுதல்களையும் மீறி சரிவர செயல்படாத கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு அல்லது மற்ற கல்வி நிறுவனங்களுடன் இணைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
    கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு மேலும் கூடுதல் தன்னாட்சி அதிகாரமும், குறைவான கட்டுப்பாடுகளும் விதிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழுவுடன் இணைந்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வகுத்துள்ளது.
    அதன்படி, அனைத்து பல்கலைக்கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் யுஜிசி-யின் கண்காணிப்புக் குழு ஆய்வு நடத்தி, அவற்றின் செயல்பாடுகளுக்கு ஏற்ப 3 பிரிவுகளாக வகைப்படுத்தும்.
    அவற்றில், முதலாவதாக, சிறப்பாகச் செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரமும், கூடுதல் மானியமும் வழங்கப்படும். இரண்டாவதாக, முன்னேற்றம் காண வாய்ப்புள்ள கல்வி நிறுவனங்களுக்கு அவற்றின் குறைபாடுகளும், அதை நிவர்த்தி செய்துகொள்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
    மூன்றாவதாக, சரிவர செயல்படாத கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும். அவற்றை முறையாகப் பின்பற்றி முன்னேற்றம் காணாத கல்வி நிறுவனங்கள் மூடப்படும் அல்லது வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
    மத்திய பொதுபட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த மாதம் தாக்கல் செய்த போது, யுஜிசி-யை மறுசீரமைப்பு செய்வது உள்பட சில கல்வித் துறை சீர்திருத்தங்களை அறிவித்திருந்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai