சுடச்சுட

    
    cts


    பெங்களூர்: ஐடி துறையின் முன்னணி நிறுவனமாக விளங்கும் காக்னிசன்டில் பணியாற்றும் சுமார் 6 ஆயிரம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    காக்னிசன்ட் நிறுவனத்தின் மனித வளத்தில், இது 2.3% ஆகும். ஐடி நிறுவனங்களின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சில சிக்கல்கள் காரணமாக இந்த முடிவை காக்னிசன்ட் எடுத்துள்ளது.

    ஆண்டுதோறும் தனது ஊழியர்களை களையெடுக்கும் வேலையை காக்னிசன்ட் செய்து வந்தாலும், அது 1% என்ற அளவில்தான் இருக்கும். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உயர்ந்துள்ளது.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, காக்னிசன்டில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1% ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இது 1-2% ஆக இருந்தது.

    கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி காக்னிசன்ட் நிறுவனத்தில் உலக முழுவதும் 2,60,200 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் 1,88,000 பேர் அதாவது 72% ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் பணியிழக்கும் ஊழியர்கள் எத்தனை பேர் என்ற புள்ளி விவரம் வெளியிடப்படவில்லை.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai