சுடச்சுட

    

    தில்லியில் தமிழக விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்: தம்பிதுரை

    By  புதுதில்லி,  |   Published on : 20th March 2017 01:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    thambidurai

    தில்லியில் தமிழக விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் தம்பிதுரை கேட்டுக்கொண்டார். 

    விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அனைத்து நதிகளையும் நீர் வழிப் பயணத் திட்டத்தின் வாயிலாக இணைக்க வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையிலான தமிழக விவசாயிகள் தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென் இந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தில்லியில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் இன்று ஏழாவது நாளை எட்டியுள்ளது. 

    இந்நிலையில் தில்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை மக்களவை துணைசபாநாயகர் தம்பிதுரை இன்று சந்தித்தார். அப்போது அவர் விவசாயிகளிடம் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில்,  தமிழக விவசாயிகள் நாளை மத்திய அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் காவிரி மேலாண்மை வாரியம், வறட்சி நிவாரணம், விவசாய கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai