சுடச்சுட

  
  SHARADPAWAR

  பாஜகவை எதிர்கொள்ள ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மகா கூட்டணி அமைக்க முன்வர வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் யோசனை தெரிவித்தார்.
  குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் புதிய அலுவலகத்தை சரத் பவார் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:
  அண்மையில் சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றியும், கூட்டணி கட்சிகளின் ஆதரவைத் திரட்டியும் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
  அக்கட்சியை எதிர்கொள்ள வேண்டுமானால், அனைத்துக் கட்சிகளும் சுயபரிசோதனை செய்துகொள்வதுடன் ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைக்க வேண்டும்.
  பாஜகவுக்கு மாற்றாக வலிமையாக அந்த மகா கூட்டணி உருவாக வேண்டும்.
  அப்படியொரு முயற்சி முன்னெடுக்கப்பட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு அழைப்புவிடுக்கப்பட்டால், எங்களுடைய சாதகமான முடிவைத் தெரிவிப்போம் என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai