சுடச்சுட

    
    cm

    உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள பிரம்மச்சாரி முதல்வர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.
    நாட்டில் தற்போது ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் (70), ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் (62), உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் (56), அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் (54) ஆகியோர் திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரிகளாக உள்ளனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் (62) திருமணம் செய்து கொள்ளவில்லை.
    இந்நிலையில், மடாதிபதியாக இருந்து அரசியல்வாதியாக மாறியுள்ள யோகி ஆதித்யநாத் (44) உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
    இதையடுத்து, நாட்டில் திருமணம் செய்யாமல் வாழும் பிரம்மச்சாரி முதல்வர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
    இவர்களில், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் (பிஜு ஜனதா தளம் கட்சி), மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்) ஆகியோரைத் தவிர்த்து, எஞ்சிய 4 முதல்வர்களும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
    பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மனைவி, கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் மனைவி ஆகியோர் இறந்து விட்டனர். இதனால், அவர்களும் தனிமையில் வாழ்கின்றனர்.
    ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி (46), பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி (61), மத்திய அமைச்சர் உமா பாரதி (57) ஆகியோரும் பிரம்மச்சாரிகள்தான். வாஜ்பாய் தனது பிரம்மச்சாரி வாழ்க்கை குறித்து முன்பு கருத்து தெரிவித்தபோது, தமக்கு குடும்பம் இல்லாத காரணத்தினால், குடும்ப ஆட்சி என்ற கேள்விக்கே இடமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
    இதேபோல், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரும் கடைசி காலம் வரையிலும் பிரம்மச்சரிய வாழ்க்கையே வாழ்ந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai