Enable Javscript for better performance
மத்திய ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்- Dinamani

சுடச்சுட

    

    ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

    By DIN  |   Published on : 20th March 2017 11:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    GST


    புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பை அமல்படுத்துவதற்குத் தேவையான நான்கு துணை மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

    இதையடுத்து இந்த 4 துணை மசோதாக்களுக்கும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.

    ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஜிஎஸ்டி),மத்திய ஜிஎஸ்டி (சி-ஜிஎஸ்டி), யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி  உட்பட 4 துணை மசோதாக்களுக்கும், தில்லியில் இன்று காலை கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

    இதையடுத்து, இந்த நான்கு மசோதாக்களும், நிதி மசோதாவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும். ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி முறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதால் நடப்பு கூட்டத் தொடரிலேயே ஜிஎஸ்டி துணை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே மாநில ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்திருப்பதை அடுத்து, 4 துணை மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேறினால், ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி முறை நாடு முழுவதும் கொண்டு வரப்படும்.

    அதன் ஒரு பகுதியாக, மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்கு திங்கள்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டது. ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஈட்டுறுதிச் சட்டம், மத்திய ஜிஎஸ்டி (சி-ஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐ-ஜிஎஸ்டி), யூனியன் பிரதேச ஜிஎஸ்டி (யு-ஜிஎஸ்டி) ஆகிய நான்கு முக்கிய துணை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவே அமைச்சரவை கூட்டப்பட்டது.

    ஏற்கெனவே, இந்த நான்கு துணை மசோதாக்களுக்கும், மாநில ஜிஎஸ்டி (எஸ்-ஜிஎஸ்டி) துணை மசோதாவுக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    எஸ்-ஜிஎஸ்டி துணை மசோதாவைப் பொருத்தவரை, அது அந்தந்த மாநிலங்களின் பேரவைகளில் நிறைவேற்றப்பட வேண்டும்.

    ஆனால் ஈட்டுறுதிச் சட்டம், சி-ஜிஎஸ்டி, ஐ-ஜிஎஸ்டி, யு-ஜிஎஸ்டி ஆகிய நான்கு துணை மசோதாக்களும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். இந்தத் துணை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால்தான், ஜூலை மாதம் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்த முடியும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai