சுடச்சுட

  

  ராமர் கோயில் பிரச்னைக்கு சட்ட ரீதியில் தீர்வு: பாஸ்வான் விருப்பம்

  By DIN  |   Published on : 20th March 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  paswan

  உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் சட்ட ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
  மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தியின் தலைவரான அவர், பாட்னாவில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:
  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலின்போது ராமர் கோயில் விவகாரம் குறித்தோ, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்றோ பிரதமர் நரேந்திர மோடி பேசவில்லை. ஊழல்களை ஒழிப்பதாகவும், வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் கூறியே அவர் வாக்கு சேகரித்தார். சர்ச்சைக்குரிய ராமர் கோயில் விவகாரம், நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி தீர்க்கப்பட வேண்டும்.
  உத்தரப் பிரதேசத்தில் ஏழை, எளிய மக்கள் முன்னேற்றம் அடைவதற்காகவும், முறைகேடுகளை ஒழிப்பதாகவும் மாநில மக்களுக்கு மோடி உறுதியளித்திருக்கிறார். அவற்றை நிறைவேற்றுவதற்கு புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள யோகி ஆதித்யநாத் பாடுபட வேண்டும்.
  பிரதமர் மோடியின் பிரசாரத்தால், அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில், 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியமைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் "மோடி சுனாமி'யால் எதிர்க்கட்சிகள் அடித்துச் செல்லப்பட்டன. அந்த மாநிலத்தில், லோக் ஜனசக்திக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ள போதிலும், வாக்குகளைப் பிரித்து, எதிர்க்கட்சிகள் வெற்றிபெற வாய்ப்பு ஏற்படும் என்பதால், நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்றார் அவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai