சுடச்சுட

  
  kingfisher

  விதிகளை மீறி, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.295 கோடி கட்டண பாக்கி வைக்க அனுமதிக்கப்பட்டது குறித்து இந்திய விமான நிலைய ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
  இதுகுறித்து போக்குவரத்து துறைசார் விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
  இந்திய விமான நிலைய ஆணையத்துக்குச் செலுத்த வேண்டிய ரூ.295 கோடி ரூபாயை கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பாக்கி வைத்துள்ளது. ஒரு நிறுவனம் இவ்வளவு பெரிய தொகையை பாக்கி வைக்க தற்போதுள்ள எந்த விதிமுறையும் இடமளிக்கவில்லை.
  எனவே, இந்த விவகாரம் குறித்து இந்திய விமான நிலைய ஆணையம் விசாரணை நடத்த வேண்டும். மேலும், எந்தவொரு தனிநபரோ, நிறுவனமோ இவ்வளவு பெரிய கட்டண பாக்கியை வைக்க இனி இடமளிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரத்தின்படி, விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்கள் இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.4,579.57 கோடியை பாக்கி வைத்துள்ளன.
  'இது, மிகவும் கவலைக்குரிய புள்ளிவிவரமாகும். கட்டண பாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களை எதிர்கொள்வதற்கு இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு பொது விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உதவ வேண்டும் என்று தனது அறிக்கையில் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai