சுடச்சுட

    

    தெலங்கானா தலைநகர் ஹைதராபாதில் ராணுவ வீரரொருவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
    இதுதொடர்பாக, திரிமுல்கேரி காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.சத்யநாராயண ராஜு தெரிவித்ததாவது: ஹைதராபாதிலுள்ள திரிமுல்கேரி பகுதியிலுள்ள ராணுவ வழங்கல் படைப்பிரிவில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.சந்தேஷ் (34) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
    இந்நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அப்பகுதியிலுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடுமையான மன அழுத்தத்தின் காரணமாகவே, அவர் இந்த முடிவை எடுத்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சத்யநாராயண ராஜு.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai