சுடச்சுட

  

  அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதலுக்கு இனவெறிதான் காரணம்

  By DIN  |   Published on : 21st March 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sushma

  அமெரிக்காவில் இனவெறி காரணமாகவே இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
  அமெரிக்காவில் பணிபுரிந்து வந்த இந்தியர் ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா, கடந்த மாதம் 22-இல் அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதேபோல், கடந்த 2-ஆம் தேதி ஹார்னிஷ் படேல் என்ற இந்தியரும் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மாநிலங்களவையில் திங்கள்கிழமை கூறியதாவது: அமெரிக்காவில் அண்மையில் இந்தியர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக நாங்கள் கருதவில்லை. இனவெறி காரணமாகவே இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றதாக நாங்கள் முழுமையாக நம்புகிறோம். இதுதொடர்பாக, அமெரிக்க அரசுடன் உயர்நிலை அளவில் தொடர்பில் உள்ளோம் என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai