சுடச்சுட

  

  அயோத்தியில் 20 ஏக்கரில் உருவாகிறது ராமாயண அருங்காட்சியகம்!

  By DIN  |   Published on : 21st March 2017 04:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  athithyanatah

   

  லக்னோ   அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் ஒன்றை அமைப்பதற்காக நிலம் ஒதுக்கி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  சமீபத்தில் நடைபெற்று முடிந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது.அக்கட்சியின் சார்பாக யோகி ஆதித்யநாத் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

  இந்நிலையில் இன்று முதல்வர் ஆதித்யநாத் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். அதற்காக 20 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ள அவர், இது தொடர்பான கட்டுமானப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

  இதே திட்டமானது முந்தைய அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் பொழுது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

  அயோத்தி ராமர் கோயில் விவகாரம் தொடர்பான மனு ஒன்றை பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன் சுவாமி இன்று காலைதான் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai