சுடச்சுட

  

  அயோத்யா விவகாரத்தை அமைதியா பேசி தீர்த்துக்குங்க: சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை  

  By IANS  |   Published on : 21st March 2017 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ayodhya

   

  புதுதில்லி: சர்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி விவகாரத்தை அமைதியாக பேசி தீர்த்துக் கொள்வதே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறந்ததாக இருக்கும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தெரிவித்துள்ளார்.

  பாரதிய ஜனதா கட்சித்தலைவரான சுப்பிரமணியன் ஸ்வாமி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.  அந்த மனுவில் சர்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி விவகாரத்தில் 2010-ஆம் ஆண்டு அலஹாபாத் உயர்நீதி மன்றம்  அளித்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரிக்க தனியான அமர்வு ஒன்றை விரைவில் அமைக்குமாறு வலியுறுத்தினார்.

  2010-ஆம் ஆண்டு அலஹாபாத் உயர்நீதி மன்றம்  அளித்த தீர்ப்பில் சர்ச்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி நிலப்பகுதியானது மூல வழக்கை தாக்கல் செய்துள்ள மனுதாரர்களிடையே பிரித்துக் கொள்ளபட வேண்டுமென்று தீர்ப்பளித்திருந்தது.

  சுவாமியின் மனுவை கேட்ட பிறகு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் கூறியதாவது:

  சர்சைக்குரிய அயோத்யா ராமஜென்ம பூமி - பாப்ரி மசூதி விவகாரத்தை அமைதியாக பேசி தீர்த்துக் கொள்வதே சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சிறந்ததாக இருக்கும். நீங்கள் விரும்பும் யாராக இருந்தாலும் இந்த பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யலாம். நீங்கள் என்னை விரும்பினால் நானே கூட செய்லபடத் தயார். ஆனால் பிறகு இந்த வழக்கை நான் விசாரிக்க இயலாது.வேண்டுமானால் மற்றொரு நீதிபதியான எஸ்.கே.கவுலைக்கூட நீங்கள் கேட்கலாம். சம்பந்தப்பட்ட அனைவருமே தங்கள் ஆதரப்புக்கு யாரவது ஓருவரை பிரதிநிதியாக நியமிக்கலாம். நிறைய பிரச்சினைகள் உள்ளது.  நீங்கள் சம்பந்தப்பட்ட அனைவருடனும் கலந்து பேசி வரும்  மார்ச் 31-ஆம் தேதி எங்களுக்கு தெரிவியுங்கள்.

  இவ்வாறு தலைமை நீதிபதி தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai