சுடச்சுட

  

  இந்தியாவில் 6.3 கோடிப்பேருக்கு சுத்தமான குடிநீரே கிடைப்பதில்லை: அதிர்ச்சி ரிப்போர்ட்

  By DIN  |   Published on : 21st March 2017 02:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  drinking-water


  கொச்சி: உலகிலேயே சுத்தமான குடிநீர் கிடைக்காத குடிமக்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியா கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

  இந்தியாவில் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 6.3 கோடி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை என்றும், இந்த மக்கள் தொகை கிட்டதட்ட இங்கிலாந்து மக்கள் தொகைக்கு சரி நிகர் என்றும் கூறப்படுகிறது.

  அரசு திட்டங்களில் தொய்வு, அதிகப்படியான தேவை, மக்கள் தொகை அதிகரிப்பு, விவசாயத்துக்கு பயன்படுத்தும் தண்ணீரை வீணாக்குதல் போன்றவை இதற்குக் காரணமாகவும் வாட்டர்எய்ட்-டின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சுத்தமான குடிநீர் கிடைக்காததால், காலரா, மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் அதிகமாக பரவுவதாகவும் கூறப்படுகிறது.

  வளர்ந்து வரும் நாடுகளில் முன்னிலையில் இருக்கும் இந்தியா, வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, குடிநீர் ஆதாரத்தை பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  இந்தியாவின் நிலத்தடி நீர் வளத் துறையின் ஆய்வில், நிலத்தடி நீரில் 6ல் ஒரு பங்கு தண்ணீர் வீணாவதாக தெரிவிக்கிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai