சுடச்சுட

  

  இனி கங்கையும் யமுனையும் நதிகளல்ல; உயிருள்ள மனிதர்கள்! உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் ஆச்சர்ய தீர்ப்பு

  By DIN  |   Published on : 21st March 2017 12:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ganga_river

   

  டேராடூன்:      இனி கங்கையும் யமுனையும் நதிகளல்ல; அவை உயிருள்ள மனிதர்களாக கருதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் ஆச்சர்யத் தீர்ப்பை அளித்துள்ளது.  

  உத்தரகாண்ட்டைச் சேர்ந்த சலீம் என்பவர் 2014-ஆம் ஆண்டு பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் கங்கை நதியும் யமுனை நதியும் தொடர்ந்து மாசுபடுத்தப்பட்டு வருவது பற்றியும், அவற்றை பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது பற்றியும் கோரிக்கை வைத்திருந்தார்.

  அந்த மனு மீது நீதிபதிகள் அலோக் சிங் மற்றும் ராஜிவ் ஷர்மா  அடங்கிய அமர்வானது இன்று தீர்ப்பளித்தது, அதில் கூறப்பட்டிருப்பதாவது:

  கங்கை நதி, யமுனை நதி மற்றும் அதன் கிளை நதிகளும் கூட இந்துக்களால் புனிதமாக கருதி வணங்கப்படுகிறது. ஆனால் அவற்றின் தற்போதைய நிலை கவலைக்கிடமாக உள்ளது.முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் அவை காணப்படுகின்றன.

  கங்கை நதியை தூய்மைபப்டுத்தி புத்துயிர் ஊட்டுவதற்காக 'நமாமி கங்கே' என்ற பெயரில் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகிறது. இருந்தும் விரைவான செயல்பாடுகள் இல்லை.

  எனவே இந்த நதிகள்  மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், அவற்றுக்கான அங்கீகாரத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு கங்கை, யமுனை ஆகிய இரண்டிற்கும் உயிருள்ள மனிதர்கள் எனும் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது. 

  'நமாமி கங்கே' செயல் திட்ட இயக்குனரான உத்தரகாண்ட் தலைமைச் செயலாளர் மற்றும் உத்தரகாண்ட் அட்டர்னி ஜெனெரல் ஆகிய இருவரும் இந்த நதிகளுக்கு பெற்றோராக செயல்பட வேண்டும். அவர்கள் இருவரும் மனித முகங்களாக செயல்பட்டு இரண்டு நதிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு  பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். 

  இவ்வாறு நீதிபதிகளின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai