சுடச்சுட

    

    உ.பி.யில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு போலீஸார் முன்னிலையில் லத்தி சார்ஜ்

    By DIN  |   Published on : 21st March 2017 02:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உ.பி.யில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு பெண் ஒருவர் போலீஸார் முன்னிலையில் அடித்து துவசம் செய்தார்.

    உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் கவுதம் பாலி நகர் உள்ளது. இந்த பகுதி வழியாக இரவு நேர பணி முடிந்து பெண்கள் தனியாக செல்வது வழக்கம். வழக்கம்போல சம்பவத்தன்று இரவு பெண்கள் பணி முடிந்து சென்றுள்ளனர். அப்பகுதியில் ஒரு காவல் நிலையம் உள்ளது.

    அந்த வழியே பெண்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களை ஒரு கும்பல் கேலி கிண்டல் செய்ததோடு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

    இதனையடுத்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸார் வந்தனர். அப்போது, போலீஸார் ஒருவரின் கையில் இருந்த லத்தியை வாங்கிய ஒரு பெண், அந்த கும்பலில் இருந்த ஒருவனை அடித்து துவசம் செய்தார்.

    இதனை போலீஸாரும் தடுக்காமல் அமைதியாக இருந்துள்ளனர். பெண்களை கேலி செய்து பாலியல் தொல்லை கொடுத்தவர்களை அந்த பெண் தாக்கிய காட்சி தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai