சுடச்சுட

    

    உ.பி.: விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தால் ரூ.27,420 கோடி இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ வங்கி

    By DIN  |   Published on : 21st March 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sbi

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பாஜக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் கூறியதைப் போல விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தால் அரசுக்கு ரூ.27,420 கோடி இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

    இதுகுறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும், பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகள் ரூ.86,241 கோடி ரூபாயை விவசாயக் கடனாக அளித்துள்ளன. இதில், 2.5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கே பெரும்பான்மையான தொகை வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு கணக்கிட்டால், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ரூ.24,420 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
    தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியுள்ளபடி, சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டால், இந்தத் தொகையை மாநில அரசு செலுத்த வேண்டியிருக்கும்.
    நடப்பு நிதியாண்டில் உத்தரப் பிரதேச அரசின் மொத்த வருவாய் ரூ.3.4 லட்சம் கோடி என்னும் நிலையில், விவசாயக் கடன் தள்ளுபடியால் அரசுக்கு ஏற்படும் ரூ.24,420 கோடி இழப்பானது, மொத்த வருவாயில் 8 சதவீதமாகும். எனவே, இந்த இழப்பை ஈடுகட்ட மாநில அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
    விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும், கடனை திருப்பிச் செலுத்தத் தவறிய விவசாயிகள், வங்கிகளிடமிருந்து தொடர்ந்து கடனுதவி பெற வழிவகை செய்யப்பட்டால்தான் விவசாய உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai