சுடச்சுட

    

    கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க நடவடிக்கை: மக்களவையில் அமைச்சர் தகவல்

    By DIN  |   Published on : 21st March 2017 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Dharmendra

    உள்நாட்டில் எண்ணெய், இயற்கை எரிவாயு எடுப்பதை அதிகரித்து, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
    மக்களவையில் கேள்வி நேரத்தில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இது தொடர்பாக கூறியதாவது:
    நமது நாட்டின் எரிபொருள் தேவையில் 82 சதவீதம் இறக்குமதி மூலம்தான் எதிர்கொள்ளப்படுகிறது. 2021-22-ஆம் ஆண்டில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியை 10 சதவீதம் அளவுக்கு குறைக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, உள்நாட்டிலேயே எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆந்திரம், அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்தும், கடல் பகுதிகளில் இருந்தும் இப்போது கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai