சுடச்சுட

  

  குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார்.
  இதுகுறித்து சுட்டுரையில் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட பதிவுகளில், "தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  இருவரும் என்ன பேசினர் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப், கோவா மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து, அந்த மாநிலங்களில் புதிய அரசு அண்மையில் அமைந்தது. இந்த சூழ்நிலையில், பிரணாப் முகர்ஜியை பிரதமர் சந்தித்துப் பேசியுள்ளார். எனவே அதுகுறித்து பிரணாப் முகர்ஜியிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்திருக்கலாம் எனத் தெரிகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai