சுடச்சுட

  

  நீதிபதிகள் காலிப்பணியிடங்களை நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

  By DIN  |   Published on : 21st March 2017 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SC

  ""உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது; காலியாக இருக்கும் நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்ப போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெறுகின்றன'' என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
  நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு தீர்வு காண்பதற்கு ஏதுவாக அங்கு காலியாக இருக்கும் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்கள் தொடுக்கப்பட்டிருந்தன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
  உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது, நீதிபதிகளின் எண்ணிக்கையை 25 சதவீதம் அதிகரிப்பது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதல்கட்டமாக, காலியாக இருக்கும் நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதையடுத்து, உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  3 ஆண்டுகள் வரையிலும் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்த பரிந்துரைகளை அளிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
  "நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான வழிமுறை குறித்து பரிந்துரை அளிக்க மனுதாரர்களில் ஒருவரும், தில்லி பாஜக செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி உபாத்யாய விரும்பினால், உச்ச நீதிமன்றத்தை தயக்கமின்றி அணுகலாம்' என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தொடுக்கப்பட்ட பிற மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் அறிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai