சுடச்சுட

    

    ரயில்வே நிதி ஒதுக்கீட்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றம்

    By DIN  |   Published on : 21st March 2017 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரயில்வே துறைக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களும், அத்துறை சார்ந்த துணை மானியக் கோரிக்கைகளும் மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறின.
    நடப்பு நிதியாண்டுக்கான (2017-18) பொது பட்ஜெட்டுடன் இணைந்து ரயில்வே பட்ஜெட்டையும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி கடந்த மாதம் 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
    அதில் ரயில்வே துறைக்கு ரூ.1.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ரயில்வே துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.1,78,350 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. இது கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும்.
    இந்நிலையில், ரயில்வே துறைக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாக்கள் மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறின. மேலும், 2016-17 மற்றும், 2013-14-ஆம் நிதியாண்டுகளுக்கான துணை மானியக் கோரிக்கைகளும் அவையில் நிறைவேறின.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai