சுடச்சுட

  

  கடந்த இரு ஆண்டுகளில் (2015-16) வனப் பகுதிகளில் விலங்குகள் தாக்கியதில் 450 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும், வனப் பகுதிகளில் 59 யானைகளும், 121 புலிகளும் உயிரிழந்தன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் அனில் மாதவ் தவே திங்கள்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கம்: 2015-16-ஆம் ஆண்டுகளில் புலிகள் தாக்கியதில் 31 பேர் உயிரிழந்துவிட்டனர். அதிகபட்சமாக, மேற்கு வங்கத்தில் மட்டும் 18 பேர் பலியாகினர். யானைகள் தாக்கியதில் 419 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாக, அஸ்ஸாம் மாநிலத்தில் 92 பேர் உயிரிழந்தனர்.
  121 புலிகள் சாவு: மற்றொரு புறம், நாட்டில் கடந்த ஆண்டில் 121 புலிகள் உயிரிழந்தன. அவற்றில், வேட்டையாடப்பட்டதில் 31 புலிகள் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. 48 புலிகள் இயற்கையாக மரணம் அடைந்துள்ளன. 42 புலிகள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
  59 யானைகள் சாவு: இதேபோல், கடந்த 2015-16-ஆம் ஆண்டுகளில் வேட்டையாடப்பட்டதில் 12 யானைகள் உயிரிழந்தன. ஒரு யானை விஷம் வைக்கப்பட்டதாலும், 46 யானைகள் மின்சாரம் தாக்கியதாலும் உயிரிழந்தன. குடியிருப்புப் பகுதிகளுக்குள் காட்டு விலங்குகள் நுழைவதற்கான காரணங்கள் குறித்து நாடு முழுவதும் குறிப்பிடும்படியாக ஆய்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai