சுடச்சுட

  

  "ஹைட்ரோ கார்பன்' திட்டம் தேசிய நலனுக்கு அவசியம் என்று மக்களவையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்தார்.
  இது தொடர்பாக மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது அதிமுக உறுப்பினர்கள் பி.ஆர்.சுந்தரம் (நாமக்கல்), ஆர்.வனரோஜா (திருவண்ணாமலை), கே.ஆர்.ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும்புதூர்) ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதில் வருமாறு:
  புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் "ஹைட்ரோ கார்பன்' திட்டம் தொடர்பான தமிழக உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன்.
  எனினும், இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும் போது மத்திய அரசு உரிய சுற்றுச்சூழல் மதிப்பீட்டை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே எண்ணெய் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  வரும் 22-ஆம் தேதி நெடுவாசல் பகுதியைச் சேர்ந்த பிரதிநிதிகளை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் சந்தித்துப் பேசவுள்ளேன். இந்த விஷயம் தொடர்பாக கூட்டம் நடத்த உள்ளேன். தேசிய நலன்களுக்கு "ஹைட்ரோ கர்பன்' திட்டம் அவசியமானது.
  வாகனங்களுக்கு பெட்ரோல் தேவையாக உள்ளது. நாட்டின் எரிபொருள் தேவையில் 80 சதவீதம், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த விவகாரத்தில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும். ஆகவே, நெடுவாசல் "ஹைட்ரோ கார்பன்' திட்டம் தொடர்பான கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன்.
  உள்ளூர் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மத்திய அரசு 100 சதவீதம் மதிப்பளிக்கிறது. வளர்ச்சிக்கும், விவசாயத்திற்கும் இடையே முரண்பாடுகள் ஏதும் இல்லை. விவசாயிகள் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் அரசு எல்லாவற்றையும் தெளிவுபடுத்தும் என்றார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai