சுடச்சுட

  

  அனைத்து தரப்பு மக்களுக்காகவும் எனது அரசு பணியாற்றும்: மக்களவையில் யோகி ஆதித்யநாத் பேச்சு

  By DIN  |   Published on : 22nd March 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  YOGI

  மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசிய கோரக்பூர் எம்.பி.யும், உத்தரப் பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யநாத்.

  உத்தரப் பிரதேசத்தில் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் எனது அரசு பணியாற்றும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
  உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதி எம்.பி.யான ஆதித்யநாத், முதல்வராகப் பொறுப்பேற்றபோதிலும் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்யவில்லை. இந்நிலையில், மக்களவைக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவரை, ’ஜெய் ஸ்ரீராம்' என்ற கோஷத்துடனும், மேஜையைத் தட்டியும் பாஜக எம்.பி.க்கள் வரவேற்றனர். மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனும் ஆதித்யநாத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
  இதன் பிறகு அவையில் அவர் பேசியதாவது: உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சிக்கான புதிய கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்காகவும் பணியாற்றுவேன். எனது அரசு அனைவருக்குமான அரசாக இருக்கும். எந்த குறிப்பிட்ட ஜாதி, மதத்துக்கான ஆட்சியாக இருக்காது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்கீழ் உத்தரப் பிரதேசத்தில் புதிய வளர்ச்சியை ஏற்படுத்துவேன். அவரது கனவுக்கு ஏற்ப உத்தரப் பிரதேசம் ஊழல், முறைகேடுகள் இல்லாத மாநிலமாக உருவாகும். எதிர்காலத்தில் வளர்ச்சிக்கு உதாரணமாக உத்தரப் பிரதேசம் திகழும். மாநில இளைஞர்கள் பிழைப்புக்காக வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டியது இருக்காது என்றார் அவர்.


   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai