சுடச்சுட

    

     உத்தர பிரதேசத்தில் இறைச்சிக் கூடங்களை இழுத்து மூடுங்க: காவல்துறைக்கு முதல்வர் ஆணை! 

    Published on : 22nd March 2017 02:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    UP_cow

     

    லக்னோ: உத்தர பிரதேசம் முழுவதும் செயல்பட்டு வரும் பசு இறைச்சி கூடங்களை படிப்படியாக மூடுவதற்கு  நடவடிக்கைகள் எடுக்குமாறு காவல்துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

    உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பாஜகவின் முதல்வராக யோகி ஆதித்யநாத் கடந்தவாரம் பொறுப்பேற்றுக் கொண்டார்.  பதவியேற்றுக் கொண்டதிலிருந்து அவர் அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

    அந்த வரிசையில அவர் இன்று உத்தர பிரதேசம் முழுவதும் செயல்பட்டு வரும் பசு இறைச்சி கூடங்களை படிப்படியாக மூடுவதற்கு  நடவடிக்கைகள் எடுக்குமாறு மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் மாநிலம் முழுவதும் பசு கடத்தலை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai