சுடச்சுட

  

  பணி நேரத்தில் பான் மசாலா போடாதீங்க: அலுவலர்களை அதிர வைத்த உ.பி முதல்வர்!

  By PTI  |   Published on : 22nd March 2017 06:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yogi-2

   

  லக்னோ: உத்தரப்பிரதேச அரசு ஊழியர்கள் இனிமேல் பணி நேரத்தில் பான், பான்மசாலா உள்ளிட்ட புகையிaலை பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபடக் கூறியுள்ளார்.

  உத்தரப்பிரதேச முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்பு யோகி ஆதித்யநாத் இன்று தலைநகர் லக்னோவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பவன் என்னும் தலைமைச் செயலக கட்டிடத்திற்கு முதன்முறையாக வருகை தந்தார்.  துணைமுதல்வர் கேஷவ் பிரசாத் மவுரியாவும் அவருடன் வருகை தந்திருந்தார்.  

  இந்த வருகை குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மவுரியா பேசினார். அபொழுது அவர் கூறியதாவது: 

  முதல்வர் இன்று இந்த கட்டிடத்தின் எல்லா தளங்களுக்கும் சென்று பார்வையிட்டார். அத்துடன் அங்குள்ள அதிகாரிகளிடமும் பேசினார்.  அப்பொழுது அலுவலகத்தின் சுவர்களில் ஆங்காங்கே வெற்றிலை எச்சில் கறைகளை கண்டு அதிருப்தியடைந்த முதல்வர், அலுவலகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொருட்டு, இனிமேல் அரசு ஊழியர்கள் இனிமேல் பணி நேரத்தில் பான், பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிபடக் கூறியுள்ளார் 

  அத்துடன் அலுவலக சூழ்நிலையை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும் பொருட்டு பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

  இவ்வாறு மவுரியா தெரிவித்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai