சுடச்சுட

    

    மகாராஷ்டிராவில் 19 எம்எல்ஏக்கள் 9 மாதம் சஸ்பெண்ட்: சபாநாயகர் நடவடிக்கை

    By DIN  |   Published on : 22nd March 2017 02:09 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிராவில் 19 எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் 2017-18 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கடந்த 18-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும் சட்டப்பேரவைக்கு வெளியே வந்து அறிக்கையையும் தீயிட்டு கொழுத்தினர்.

    இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி எம்எல்ஏக்கள் 19 பேரை 9 மாதம் சஸ்பெண்ட் செய்து அம்மாநில சபாநாயகர் ஹரிபாவு நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி அவர்கள் அனைவரும் இன்று முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏம்எல்ஏக்களில் 9 பேர் காங்கிரஸ் கட்சியையும், 10 பேர் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai