சுடச்சுட

  
  NIA

  அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பாவேஷ் படேல், தேவேந்திர குப்தா ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தில்லி தேசியப் புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம் (என்ஐஏ) புதன்கிழமை உத்தரவிட்டது.
  மேலும், பாவேஷ் படேலுக்கு ரூ.10 ஆயிரமும், தேவேந்திர குப்தாவுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
  ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள கவாஜா மொய்னுதீன் சிஷ்டி தர்காவில் கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி, இஃப்தார் விருந்தின்போது குண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர்.
  இந்த வழக்கை முதலில் ராஜஸ்தான் மாநிலத்தின் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர், கடந்த 2011-ஆம் ஆண்டில், தேசியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.
  இந்த வழக்கு தொடர்பாக, 149 பேரிடம் சாட்சியம் பெற்ற தேசியப் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள், 3 துணைக் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பாவேஷ் படேல், தேவேந்திர குப்தா, ஜோஷி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் கடந்த 8-ஆம் தேதி தீர்ப்பளித்தது. மேலும், சுவாமி அசீமானந்த் உள்ளிட்ட சிலரை வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது.
  இந்நிலையில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜோஷி, குண்டு வெடிப்புக்குப் பிறகு இறந்துவிட்ட நிலையில், பாவேஷ் படேல், தேவேந்திர குப்தா ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தில்லி சிறப்பு நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai