சுடச்சுட

  

  இது என்ன பள்ளிக்கூடமா? உறுப்பினர்களை கடிந்துகொண்ட மக்களவைத் தலைவர்

  By DIN  |   Published on : 23rd March 2017 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sumitramahajan

  மக்களவையில் புதன்கிழமை அலுவல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, உறுப்பினர்கள் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொண்டிருந்ததால் கோபமடைந்த அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், 'இது என்ன பள்ளிக்கூடமா?' என்று கடிந்து கொண்டார்.
  மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்த பிறகு, உறுப்பினர்கள் ஒருவருடன் ஒருவர் பேசி சிரித்தபடி இருந்தனர். இது, அவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு எரிச்சலூட்டியது. இதையடுத்து, அவர் உறுப்பினர்களை நோக்கி, 'என்ன நடந்து கொண்டிருக்கிறது? இது என்ன பள்ளிக்கூடமா? அமைதியாக இருங்கள்' என்று கடிந்து கொண்டார். அதன்பிறகே, அவையில் அமைதி திரும்பியது.
  முன்னதாக கேள்வி நேரம் முழுவதும் பிரதமர் மோடி அவையில் இருந்தார். அப்போது, அவை மிக அமைதியாக இருந்தது. கேள்வி நேரம் முடிந்து அவர் கிளம்பிச் சென்றதும், உறுப்பினர்கள் ஒருவருடன் ஒருவர் பேசத் தொடங்கியதால், அவையில் சப்தம் எழுந்தது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai