சுடச்சுட

  

  உ.பி. அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு: முதல்வர் வசம் உள்துறை; மெளரியாவுக்கு பொதுப் பணித் துறை

  By DIN  |   Published on : 23rd March 2017 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  YOGI

  உத்தரப் பிரதேசத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற பாஜக அரசில், அமைச்சர்களுக்கான துறைகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை ஒதுக்கீடு செய்தார். மாநில உள்துறையை முதல்வர் தம் வசம் வைத்துக் கொண்டதாக ஆளுநர் ராம் நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  உள்துறையைத் தவிர, செய்தி ஒளிபரப்பு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, உணவு மற்றும் பொது விநியோகம், சுரங்கம் உள்ளிட்ட துறைகளையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தம் வசம் வைத்துக் கொண்டார்.
  துணை முதல்வர் கேசவ பிரசாத் மெளரியாவுக்கு பொதுப் பணித் துறை, உணவு பதப்படுத்துதல் துறை, பொது நிறுவனங்கள் துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு துணை முதல்வரான தினேஷ் சர்மாவுக்கு உயர் கல்வி, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் வழங்கப்பட்டுள்ளன.
  முக்கியத் துறைகளான நிதித் துறை ராஜேஷ் அகர்வாலுக்கும், சுகாதாரத் துறை சித்தார்நாத் சிங்குக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  இதுதவிர, சூர்ய பிரதாப் சாஹு (விவசாயம்), சுரேஷ் குமார் கன்னா (நகர்ப்புற மேம்பாடு), சுவாமி பிரசாத் மெளரியா (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு), சதீஷ் மகானா (தொழில் துறை மேம்பாடு), ரீட்டா பகுகுணா ஜோஷி (மகளிர், குழந்தைகள் நலன், சுற்றுலா), தாரா சிங் செளஹான் (வனம் மற்றும் சுற்றுச்சூழல்) உள்பட 22 பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
  முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் மொத்தம் 25 கேபினட் அமைச்சர்கள் உள்ளனர். இதுதவிர, 9 தனி பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களும், 13 இணையமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai