சுடச்சுட

  

  காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்க வேண்டும்: மணிசங்கர் அய்யர்

  By DIN  |   Published on : 23rd March 2017 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  manishankarIyer

  காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி விரைவில் பொறுப்பேற்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.
  உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் மீதும், அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீதும் உள்கட்சியிலேயே விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில், மணிசங்கர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  இதுகுறித்து தில்லியில் பிடிஐ செய்தியாளரிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
  உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்திருப்பதால் காங்கிரஸ் கட்சி மீது விமர்சனங்கள் எழுவது சகஜமானதுதான். எனினும், இந்தத் தோல்விக்கு முழுக்க முழுக்க ராகுல் காந்தியை குறைக்கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
  தற்போது காங்கிரஸ் துணைத் தலைவராக மட்டுமே ராகுல் இருக்கிறார். அவர் தலைவராக பொறுப்பேற்கவில்லை. சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லாததால் தலைமைப் பொறுப்பினை அவர் கூடுதலாக கவனித்து வருகிறார். எனவே, தேர்தல் தோல்விக்கு அவரை மட்டும் பொறுப்பாக்குவது ஏற்புடையதல்ல.
  அதேவேளையில், நாட்டில் காங்கிரஸ் மீண்டும் கோலோச்சுவதற்கு, கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டியது அவசியம். சோனியா காந்தி வழிகாட்டியாக இருக்க வேண்டும். காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்றால் மட்டுமே காங்கிரஸில் உள்கட்சி ஜனநாயகம் வலுவாக இருக்கும்.
  வருகிற 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் இப்போதிருந்தே தயாராக வேண்டும். தேர்தல் வியூகங்களை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. பிகாரைப் போல பாஜகவுக்கு எதிராக மகா கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட வேண்டும். அவ்வாறு கூட்டணி ஏற்பட்டால் மட்டுமே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியும் என்றார் மணிசங்கர்அய்யர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai