சுடச்சுட

    
    PRAMOD

    கோவா சட்டப் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரமோத் சாவந்த் (38) புதன்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    40 உறுப்பினர்கள் அடங்கிய கோவா சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனினும், 10 இடங்களில் வெற்றி பெற்ற பிற கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது.
    இதன்படி, கோவாவின் புதிய முதல்வராக மனோகர் பாரிக்கர் கடந்த 14-ஆம் தேதி பதவியேற்றார். தொடர்ந்து, கோவா சட்டப் பேரவையில் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 22 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் கிடைத்தன.
    இந்நிலையில், சட்டப் பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் புதன்கிழமை (மார்ச் 22) கூடியது. தொடர்ந்து, பேரவைத் தலைவரைத் தேர்தெடுப்பதற்கான வாகóகெடுப்பு நடைபெற்றது. பாஜக சார்பில் பிரமோத் சாவந்த், காங்கிரஸ் சார்பில் அலெக்úஸா ரெஜினால்டோ லோரென்கோ ஆகியோர் பேரவைத் தலைவர் பதவியிடத்துக்குப் போட்டியிட்டனர்.
    இதில், பிரமோத் சாவந்த் 20 வாக்குகளைப் பெற்றார். லாரென்கோவுக்கு 15 வாக்குகள் கிடைத்தன. இதையடுத்து, பிரமோத் சாவந்த் பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து அவருக்கு முதல்வர் மனோகர் பாரிக்கரும், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் காவ்லேகரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
    இந்நிலையில், மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹா கோவா சட்டப் பேரவையில் வியாழக்கிழமை உரை நிகழ்த்தவுள்ளார். தொடர்ந்து, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் மனோகர் பாரிக்கர் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்ய உள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai