சுடச்சுட

  

  சட்டம் வகுக்கும் அதிகாரம் நீதித்துறைக்கும் உண்டு: மத்திய அரசு விளக்கம்

  By DIN  |   Published on : 23rd March 2017 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சட்டம் வகுக்கும் அதிகாரம் நீதித்துறைக்கும் இருப்பதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கமளித்துள்ளார்.
  நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்து மக்களவையில் சில உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது, இந்த விளக்கத்தை ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
  மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, இந்த விவகாரத்தை பாஜக எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால் எழுப்பினார். அப்போது அவர் பேசியதாவது:
  சட்டமியற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கும், அதன் உறுப்பினர்களுக்கு மட்டுமே உள்ளது. இதனை அரசியல் சாசனமும் விளக்கியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் சட்டமியற்றும் அதிகார வரம்பினைக் கைப்பற்றும் நோக்கில் உள்ளது.
  உதாரணமாக, பிசிசிஐ, ஐபிஎல் கிரிக்கெட் விவகாரம், நீட் தேர்வு விவகாரம் உள்ளிட்டவற்றில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் புதிய சட்டங்களை உருவாக்கும் வகையில் உள்ளது.
  மேலும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் புதிய நடைமுறையைக் கூட நீதித்துறை ஏற்கவில்லை. இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு ஏற்கிறதா? இதுதவிர, நாட்டில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகளை விரைவில் முடிக்க அரசு ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? என சஞ்சய் ஜெய்ஸ்வால் கேள்வியெழுப்பினார்.
  ஜெய்ஸ்வாலின் இந்தக் கருத்துக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது: இந்திய ஜனநாயகத்தின் மூன்று தூண்களாக கருதப்படும் ஆட்சித்துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவற்றுக்கு சட்டம் தொடர்பான அதிகாரங்கள் இருக்கின்றன. இதனை உச்ச நீதிமன்றமும் ஒரு வழக்கில் தெளிவாக விளக்கியுள்ளது.
  அவ்வாறு, இந்த மூன்று துறைகளுக்கும் சட்டம் தொடர்பான அதிகாரப் பகிர்வு சம அளவில் இருக்குமேயானால், சட்டம் வகுக்கும் அதிகாரமும் நீதித்துறைக்கு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai