சுடச்சுட

    

    சட்லஜ்-யமுனை கால்வாய் விவகாரம்: ராஜ்நாத் சிங்கை சந்திக்கிறது ஹரியாணா அனைத்துக் கட்சி குழு

    By DIN  |   Published on : 23rd March 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சட்லஜ்-யமுனை இணைப்புக் கால்வாய் விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் அந்த மாநில அனைத்துக் கட்சிக் குழுவினர் வெள்ளிக்கிழமை சந்திக்க இருக்கின்றனர்.
    214 கி.மீ. நீளம் கொண்ட இந்த கால்வாய் விவகாரம் தொடர்பாக பஞ்சாபுக்கும், ஹரியாணாவுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது. நதி நீரில் தங்கள் பங்கீட்டை பெறுவதற்காக கால்வாய் அமைக்க வேண்டுமென்று ஹரியாணா கோரிக்கை விடுத்து வருகிறது. ஹரியாணா அரசு தங்கள் பகுதியில் 92 கி.மீ. நீளத்துக்கு கால்வாயை அமைத்துவிட்டது. ஆனால், பஞ்சாப் அரசு தங்கள் பகுதியில் கால்வாய் அமைக்கவில்லை. இதையடுத்து, ஹரியாணா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாப் அரசு கால்வாய் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
    ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்துவிட்டு, சட்லஜ்-யமுனை கால்வாய்த் திட்டத்தின் மூலம் அண்டை மாநிலங்களுடன் நதி நீரைப்பகிரும் ஒப்பந்தத்தை ரத்து செய்து பஞ்சாப் பேரவையில் 2004-ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    இதனை எதிர்த்து ஹரியாணா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் பஞ்சாப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளித்தது. இந்த கால்வாய் விவகாரம் இப்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
    பஞ்சாபில் கடந்த 10 ஆண்டுகளாக அகாலி தளம்-பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தது. இப்போது அங்கு காங்கிரஸ் புதிதாக ஆட்சி அமைந்துள்ளது. இந்நிலையில், கால்வாய் விவகாரம் தொடர்பாக ஹரியாணா மாநில அனைத்துக் கட்சிக் குழுவினர் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க இருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai