சுடச்சுட

    

    தில்லி உள்பட 4 நகரங்களில் உண்ணாவிரதம்: நீதிபதி கர்ணன் முடிவு

    By DIN  |   Published on : 23rd March 2017 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Karnan1

    உச்ச நீதிமன்றம் தனக்கு எதிராக பிறப்பித்த பிடி ஆணையை திரும்பப் பெற வலியுறுத்தி, தில்லி உள்பட 4 நகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் முடிவு செய்துள்ளார்.
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு எதிராக அண்மையில் பிடி ஆணை பிறப்பித்த உச்ச நீதிமன்றம், அவருக்கு வழக்கு விசாரணை பணிகள் வழங்குவதையும் நிறுத்தி வைத்தது.
    இந்நிலையில், நீதிபதி கர்ணனின் வழக்குரைஞர் பீட்டர் ரமேஷ் குமார், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
    நீதிபதி கர்ணனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை கைவிட வேண்டும், அவருக்கு மீண்டும் வழக்கு விசாரணை பணிகள் வழங்கப்பட வேண்டும், அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடி ஆணையை திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லி உள்பட 4 நகரங்களில் அவர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவிருக்கிறார்.
    தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை முன்போ அல்லது ராம்லீலா மைதானத்திலோ உண்ணாவிரதம் நடைபெறும். மேலும், சென்னை, கொல்கத்தா, லக்னௌ ஆகிய நகரங்களிலும் அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருக்கிறார். இப்போராட்டத்துக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ரமேஷ் குமார் தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai