சுடச்சுட

  

  தில்லி மாநகராட்சி தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று மாநில தேர்தல் ஆணையர் ஸ்ரீவஸ்தா புதன்கிழமை தெரிவித்தார். ஏப்ரல் 22ஆம் தேதி மாநகராட்சித் தேர்தல் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்து.
  இதுகுறித்து தில்லி தேர்தல் ஆணையர் எஸ்.கே. ஸ்ரீவஸ்தவா செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
  தில்லி மாநகராட்சிகளுக்கு ஏப்ரல் 22ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால் அன்றைய தினம் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறுவதால், மாநகராட்சித் தேர்தல் தேதி ஏப்ரல் 23-க்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணிக்கை ஏப்ரல் 26ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. எனினும், மனுத் தாக்கல் செய்யும் தேதி உள்பட பிற தேதிகள் மாற்றப்படவில்லை' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai