Enable Javscript for better performance
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் விவகாரம்: சித்துவின் இலாகா தேவைப்பட்டால் மாற்றப்படும்: அமரீந்- Dinamani

சுடச்சுட

    

    தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கும் விவகாரம்: சித்துவின் இலாகா தேவைப்பட்டால் மாற்றப்படும்: அமரீந்தர் சிங்

    By DIN  |   Published on : 23rd March 2017 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

    தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசிய பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ள பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சித்துவின் இலாகா தேவை ஏற்பட்டால் மாற்றப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
    பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பிறகு, தில்லியில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை அமரீந்தர் சிங் புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
    காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், பிரதமர் மோடியை விவசாய கடன் விவகாரம் தொடர்பாக முன்பு சந்தித்துப் பேசினோம். அதன் தொடர்ச்சியாக தற்போது நான் சந்தித்துப் பேசியுள்ளேன்.
    இந்த சந்திப்பின்போது, பிரதமரிடம் உத்தரப் பிரதேச மாநில விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்போது, பஞ்சாப் விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் என்றார் அமரீந்தர் சிங்.
    அப்போது அவரிடம், பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சித்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்கப் போவதாக தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமரீந்தர் சிங் அளித்த பதில் வருமாறு:
    அவரது செலவுக்கு வருமானத்தை ஈட்டுகிறார். தனது சொந்த நடவடிக்கையின்மூலம் வருமானம் ஈட்டுவதற்கு யார் ஆட்சேபனை தெரிவிக்க முடியும்? அரசியல்வாதிகள் வர்த்தக ரீதியிலான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவது தவறில்லை. எனினும், இதுகுறித்து பஞ்சாப் அட்டார்னி ஜெனரலின் கருத்தைக் கேட்டு, அவசியம் ஏற்பட்டால், அவருக்கு அளிக்கப்பட்ட கலாசார மற்றும் சுற்றுலா இலாகா மாற்றப்படும் என்று அமரீந்தர் சிங் கூறினார்.
    முன்னதாக, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அமரீந்தர் சிங் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், பஞ்சாப் மாநிலத்துக்கு வேளாண் இடுபொருட்கள் கொள்முதலுக்கு மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai