சுடச்சுட

  

  பெண்கள் சாதனையாளர்களாக உருவெடுப்பதை மையக் கருவாக கொண்ட ’தங்கல்' ஹிந்தி திரைப்படம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வியாழக்கிழமை (மார்ச் 23) திரையிடப்படவுள்ளது.
  இதுதொடர்பாக மக்களவை தலைமைச் செயலர் அனூப் மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  நாடாளுமன்றத்திலுள்ள பாலயோகி அரங்கத்தில் புதன்கிழமை அலுவல்கள் முடிந்து மாலை 6.30 மணியளவில் ’தங்கல்' ஹிந்தி திரைப்படம் திரையிடப்படுகிறது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் விருப்பத்தின்படி திரையிடப்படும் இப்படத்தை காண்பதற்கு, எம்.பி.க்கள் தங்களது மனைவியுடன் வருகை தர வேண்டும். பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்ற கருத்தை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai