சுடச்சுட

  
  rajnath-sing

   

  பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  ஜம்மு - காஷ்மீரில் அமைதியான சூழலை உருவாக்கும் பொருட்டு அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் அரசு உறுதியளித்துள்ளது.
  மாநிலங்களவையில் இதுதொடர்பாக புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிலளித்துப் பேசியதாவது:
  ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தபோது நானே நேரடியாக மூன்று முறை சம்பவ இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்தேன்.
  தற்போது நிலைமை சற்று சீரடைந்துள்ளது. இதற்கு முழுக்க, முழுக்க மத்திய அரசுதான் காரணம் என்று உரிமை கொண்டாட விரும்பவில்லை. இது ஓர் ஒருங்கிணைந்த முயற்சி. ஜம்மு - காஷ்மீரில் பூரண அமைதி திரும்ப வேண்டுமானால், அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பும் அவசியம். அதற்காக அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது.
  பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையைப் பொருத்தவரை, சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அதை சாத்தியமாக்க முடியும். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதை முற்றிலுமாக நிறுத்திக் கொண்டால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும். இந்த நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாகவுள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.
  காஷ்மீரில் பதற்றம் தணிந்தது: இதனிடையே, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் பதற்றம் தணிந்து அமைதி திரும்பியுள்ளது' என்றார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai