சுடச்சுட

  
  pranap

  பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத அமைதியான சூழலை உருவாக்க பாகிஸ்தானுக்கு ஒத்துழைப்பு அளிக்க இந்தியா தயார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
  பாகிஸ்தானின் தேசிய தினத்தையொட்டி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
  உரி மற்றும் பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் அந்நாட்டுக்கும் இடையேயான விரிசல் அதிகரித்தது. அதன் விளைவாக தேசியப் பாதுகாப்புச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது.
  இதனிடையே, ஜம்மு - காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் படையினர் சமீப காலமாக அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருவதற்குக் கண்டனம் தெரிவித்த மத்திய அரசு, பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வற்காகவே பாகிஸ்தான் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தது.
  இத்தகைய கசப்பான சூழலில், பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தேசிய தினத்தையொட்டி, அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹூசைனுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
  பாகிஸ்தான் மக்களுக்கும், உங்களுக்கும் தேசிய தின நல்வாழ்த்துக்களை இந்திய அரசு மற்றும் மக்களின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்தை வேரறுத்து சுதந்திரமான சூழலை உருவாக்கும் முயற்சிகளில் பாகிஸ்தானுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக இந்தியா உறுதியளிக்கிறது என்று அதில் பிரணாப் தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai