சுடச்சுட

    
    krishna

    தில்லியில் பாஜகவில் புதன்கிழமை சேர்ந்த முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு கட்சி உறுப்பினர் அட்டையை வழங்குகிறார் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா.

    காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, பா.ஜ.க.வில் புதன்கிழமை இணைந்தார்.
    கர்நாடக அரசியலில் 50 ஆண்டுகளாக கோலோச்சிய எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சியிலிருந்து முதல்வர், வெளியுறவுத் துறை அமைச்சர், மகாராஷ்டிர மாநில ஆளுநர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார்.
    அண்மைக் காலமாக கட்சியில் தனக்கு உரிய மரியாதை இல்லை எனக் குற்றம்சாட்டிய எஸ்.எம்.கிருஷ்ணா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார். இந்த நிலையில், தில்லி அசோகா சாலையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் எஸ்.எம்.கிருஷ்ணா இணைந்தார். அவருக்கு மத்திய அமைச்சர்கள் சதானந்த கெளடா, அனந்த்குமார், கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளர் முரளிதர்ராவ், கர்நாடக பாஜக தலைவர்கள் ஆர்.அசோக், சி.டி.ரவி உள்ளிட்டோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
    பின்னர், எஸ்.எம்.கிருஷ்ணா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் நமது நாட்டை மிகுந்த உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். மிகப்பெரிய தலைவர்களால் வழிநடத்தப்படும் பா.ஜ.க.வில் இணைவதில் நான் பெருமிதப்படுகிறேன் என்றார்.


     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai