சுடச்சுட

    

    பிரிட்டன் நாடாளுமன்றம் அருகே பயங்கரவாதத் தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

    By DIN  |   Published on : 23rd March 2017 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய லண்டனில் அமைந்துள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகம் அருகே நேற்று புதன்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மத்திய லண்டனில் அமைந்துள்ள பிரிட்டன் நாடாளுமன்ற வளாகம் அருகே புதன்கிழமை மர்ம நபர் ஒருவர் போலீஸை கத்தியால் குத்தினார். இதையடுத்து அந்த நபரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

    இந்த சம்பவம் பிரிட்டன் மீதான பயங்கரவாதத் தாக்குதல் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்க பதிவில், பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இரங்கலும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

    மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக பிரிட்டனின் நடவடிக்கைக்களுக்கு இந்தியா துணை நிற்கும் எனறு மோடி தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai