சுடச்சுட

    

    மகாநதியின் முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும்: கட்கரிக்கு நவீன் பட்நாயக் கடிதம்

    By DIN  |   Published on : 23rd March 2017 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மீன்பிடி படகுகள் எளிதாகச் சென்று வரும் வகையில் மகாநதியின் முகத்துவாரத்தையும், படகுகள் செல்லும் கால்வாய்களையும் உடனடியாக ஆழப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இதுதொடர்பாக, அவர் மத்திய கப்பல் மற்றும் சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
    கிழக்கு கடற்கரையில் பாரதீப் மின்பிடி துறைமுகம் மிகப்பெரிய மீன்வரத்து மையமாக திகழ்கிறது. இந்தத் துறைமுகம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் என சுமார் 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இங்கு சுமார் 640 விசை மீன்பிடி படகுகளும், 100 ஃபைபர் படகுகளும் செயல்படுகின்றன.
    இத்துறைமுகம், மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் ஆதரவுடன் கடந்த 1996-ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2011-ஆம் ஆண்டு வரை பாரதீப் துறைமுகப் பொறுப்புக் கழகம் இதை நிர்வகித்து வந்தது.
    தற்போது மீனவர்கள் உள்ளிட்டோர் அடங்கிய பிரதிநிதிகள் குழு துறைமுகத்தை நிர்வகித்து வருகிறது.
    தூர்வாரும் பணி: மீன்பிடி படகுகள் செல்லும் கால்வாய்களை கடைசியாக கடந்த 1997-ஆம் ஆண்டு துறைமுக அதிகாரிகள் தூர்வாரி ஆழப்படுத்தினர். அதன் பிறகு, ஆழப்படுத்தும் பணி நடைபெறவில்லை.
    மீன்பிடி படகுகள் சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் செல்ல வேண்டுமெனில், நதியின் முகத்துவாரம் மற்றும் கால்வாயின் ஆழம் குறைந்தது 4 மீட்டராவது இருக்க வேண்டும். ஆனால், முகத்துவாரத்தின் ஆழம் தற்போது ஒரு மீட்டருக்கும் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
    இதனால், மீன்பிடி படகுகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, முகத்துவாரத்தை உடனடியாக ஆழப்படுத்த வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    மேலும், கடலோரத் தடுப்புச் சுவர்களைப் பாதுகாக்க வேண்டி கடற்கரையை செழிப்பூட்டும் பணிகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனால் நதியின் முகத்துவாரத்தில் வண்டல் படிவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நதியின் முகத்துவாரத்திலும், படகுகள் செல்லும் கால்வாயிலும் வண்டல் படிவதைத் தடுக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்தக் கடிதத்தில் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai